சனி, 21 அக்டோபர், 2017

திட்டங்கள் யாருக்காக…?


ஈரோட்டிலிருந்து சுமார் நூறு கி.மீ. தொலைவில் அதாவது அந்தியூரிலிந்து போக்குவரத்து வசதி ஏதுமற்ற இந்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கொங்காடைக்கு அந்தியூரிலிருந்து 60 கி.மீ. பிக்கப் – டெம்போவில்தான் பயணிக்க வேண்டும்.




இந்த கொங்காடை மலைப்பகுதியில் நான்கு நடுநிலைப்பள்ளிகளும், மூன்று தொடக்கப்பள்ளிகளும், சுடர் அமைப்பு நடத்தும் ஐந்து குழந்தைத்தொழிலாளா் சிறப்புப்பள்ளிகளும் இயங்கிவருகின்றன. இந்த கொங்காடை கிராமத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் 2012ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தப்பட்ட ஒசூர் பள்ளிக்கு ஒன்னகரை, தம்புரெட்டி செங்குளம், கொங்காடை போன்ற பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டே குழந்தைகள் பத்து கி.மீ.க்கும் மேல் நடந்தே இப்பள்ளிக்கு வருகின்றனர்.
”பல குழந்தைகள் நடந்து வரமுடியாமல் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் உண்டு. குறிப்பாக கொங்காடை பகுதியில் கடந்த ஆண்டு சுமார் 15 மாணவ, மாவியரும், இவ்வாண்டு சுமார் 7 மாணவ, மாணவியரும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இவ்வாறாக படிப்பை பாதியில் நிறுத்தும் பட்சத்தில் மாணவர்கள் குழந்தைத்தொழிலாளா்களாக மாறுகின்றனர். மாணவிகளுக்கு குழந்தைத்திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.”
போக்குவரத்துரத்து வசதியற்ற பகுதிகளிலிருந்து நெடுந்தொலைவு நடந்துவரும் இந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மதிவண்டி வழங்கிடக்கோரினால், அத்திட்டம் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மட்டுமே என பள்ளிக்கல்வித்தறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. விதிகளை தளா்த்தி இந்த மாணவர்களுக்கு மதிவண்டி வழங்கவேண்டும் என்பது கோரிக்கை.
பொதுவாக திட்டங்களை தீட்டும்போது, மலைப்பகுதிகளுக்கு வேறாகவும், சமவெளிப்பகுதிகளுக்கு வேறாகவும் திட்டங்களை அரசு தீட்டவேண்டும். மலைப்பகுதி மக்களின் வாழ்வியல் முறைகள், தேவைகள் வேறு, சமவெளிப்பகுதி மக்களின் சூழ்நிலைகளும், தேவைகளும் வேறு. இதனை உள்வாங்கி திட்டங்களை சீரமைப்பு செய்யுமா அரசு?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழங்குடியினர் பள்ளியில் 30 ஆண்டு காலமாக தொடரும் அவலம்…

ஆசனூர் பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டு காலமாக தொடரும் அவலம்…