ஆசனூர்
பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில்
முப்பது
ஆண்டு காலமாக தொடரும் அவலம்…
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறை மூலமாக ஈரோடு மாவட்டத்திலேயே முதன்முதலாக தாளவாடி வட்டாரம், ஆசனூரில்
1952ல் துவப்பள்ளியாக தொடங்கப்பட்டது. தலமலை முதல் கோட்டமாளம் வரையில் சுமார்
முப்பதுக்கும் மேற்பட்ட பழங்குடி கிராமத்தினரின் குழந்தைகள் இங்கு
தங்கவைக்கப்பட்டு, கல்வி வழங்கப்பட்டு வருகிறது. நாளவில் மாணவர்களின் வருகை
அதிகரிக்கும் போது நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்தப்படுகிறது. பிறகு, 1988ல்
உயர்நிலைப்பள்ளியாகம் தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்படும்போதே ஆங்கில
பாடத்திற்கான ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படாமலேயே ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்தறை உத்திரவிட்டுள்ளது. சுமார் முப்பது ஆண்டுகளாகியும் இக்குறைபாடு
இன்னும் களையப்படவில்லை.
அடுத்து 1997ல் மேல்நிலைப்பள்ளியாக தரம்
உயர்தப்படும்போது, தமிழ் பாடத்திற்காக ஆசிரியா் பணியிடம் உருவாக்கப்படாமலேயே தரம்
உயா்த்தப்படுகிறது. இன்று வரை பணியிடமே உருவாக்கப்படாமல் இந்த அவலம் தொடர்கிறது.
பிற பாடங்களை நடத்தும் ஆசிரியர்களே இப்பாடங்களையும் நடத்துகின்றனர்.
மேலும், தற்போது 11 வகுப்பில் 41 பேரும், 12 வகுப்பில் 42 பேரும் என 83 பேர் மேல்நிலை
வகுப்பு பயிலும் இவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் தவிர பிற இடங்கள் காலியாகவே உள்ளன.
இன்னும் நான்கு ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்க வேண்டும். ஆசிரியர்களின்றி 11
மற்றும் 12 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு எழுதுவது மிகக்கடினமான
ஒன்று.
பிற மாணவர்களுக்கு பாடத்திற்கு ஒரு
ஆசிரியர், மாலை நேர சிறப்பு வகுப்புகள், விடுமுறை கூட விடாமல் சிறப்பு கவனம்
செலுத்தும்போது, இந்த பழங்குடி மாணவர்களின் நலனில் மட்டும் ஏனிந்த அலட்சியம்.
விளிம்பு நிலையில் உள்ள இம்மாணவர்கள் எவ்வாறு நீட் தோ்வை சந்திப்பது?
பழங்குடி மாணவர்களின் கல்வித்தரம்
வெகுவாக பாதிக்கும் இப்பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு
தீர்வு காண வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக